செவ்வாய், 20 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 59

இலக்கணம் - நிகண்டுகள்


16.       பொருள்தொகை நிகண்டின் நூலாசிரியர்?
புதுக்கோட்டை குடுமியாமலை சுப்பிரமணிய பாரதி. (நிகண்டுகளின் முப்பிரிவுகளில் மூன்றாம் பிரிவை மட்டும் விளக்கும் நூல் இதுவாகும். மதுரைத்தமிழ்ச் சங்கம் 1920 இல் பதிப்பித்துள்ளது).

17.       பொதிகை நிகண்டு நூற்செய்திகளைக் கூறுக?
சாமிநாதம் என்ற இலக்கண நூலைச் செய்த சாமிநாதக் கவிராயர்  இயற்றிய நூல் பொதிகை நிகண்டாகும். இரண்டு பிரிவுகளைக் கொண்டது இந்நூல். விருத்தப்பாவில் 18138 சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை 1934 இலில் வையாபுரிப்பிள்ளை பதிப்பித்துள்ளார்.

18.       உசிதசூடாமணி நிகண்டின் ஆசிரியர்?
சிதம்பரக் கவிராயர் (18 தொகுப்புகளைக் கொண்ட உசித சூடாமணி விருத்தப்பாவில் அமைந்த நூலாகும். காலம் 18ஆம் நூற்றாண்டு).

19.       நாமதீப நிகண்டு பற்றிக் கூறுக?
சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய நூல் நாமதீப நிகண்டு. 808 வெண்பாக்களில் 1200 சொற்கள் விளக்கப்பட்டுள்ளன. நான்கு படலங்களும் 16 வருக்கங்களும் கொண்டது.

20.      வேதகிரியார் சூடாமணி நிகண்டு செய்திகளை உரைக்க?
மண்டலபுருடரின் சூடாமணி நிகண்டில் இல்லாத புதிய சொற்களைத் தொகுத்து, எதுகை, மோனை முறையில் 290 விருத்தங்களை இயற்றிச் சூடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதியில் சேர்த்து 600 பாக்கள் உடைய தனிநூலாக வேதகிரியார் சூடாமணி நிகண்டு என்ற பெயரில் வழங்கினார். இந்நூலாசிரியர் களத்தூர் வேதகிரி முதலியாரின் காலம் 19ஆம் நூற்றாண்டு.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...