செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 76

இலக்கியம் -திணை இலக்கியம்

11.        சங்கம் இருந்தமைக்கான சான்றுகளை எவ்வாறு பகுக்கலாம்?
1.         அகச்சான்றுகள் (சங்கப்பாடல்கள்) 2. பிற்காலச்சான்றுகள் 3. புறச்சான்றுகள் (பிறர்  குறிப்பு,  கல்வெட்டு போல்வன).

12.       சங்கம் இருந்தமை பற்றிய செய்திகளைப் பாடிய பிற்கால சான்றோர்களைக் கூறுக?
திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர், ஆண்டாள், திருமங்கையாழ்வார், சுந்தரர், மாணிக்கவாசகர், அகநானுற்று உரைப்பாயிரக்காரர், சேக்கிழார், கம்பர், பெரும்பற்றப்புலியூர் நம்பி,  ச்சினார்க்கினியர்,  ஆத்திசூடி பாடிய ஔவை ஆகியோர்.

13.       சங்கம் இருந்தமைக்கான அகச்சான்றுகளைத் தரும் நூல்களைப் பட்டியல் இடுக?
தொல்காப்பியம் (பாயிரம்), மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து,  புறநானூறு,  சிலப்பதிகாரம்,  மணிமேகலை,  பரிபாடல் ஆகியன.

14.       சங்கம் இருந்தமைக்கான குறிப்புக்கள் தரும் பிறநாட்டார் பற்றிக் கூறுக?
தாலமி, பிளினி, இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம், இராசாவளி, இராசரத்னாகிரி ஆகியவையும், பெரிபுளூஸ் என்ற நூலும் சங்கம் பற்றிய குறிப்புக்களைத் தருகின்றன.

15.       மகாபாரதம் தமிழாக்கம் செய்யப்பட்டதும் மதுரைச் சங்கம் இருந்ததும் பற்றிய செய்தியைக் கூறும் சாசனம் எது?
சின்னமனூர் செப்பேடு (10ஆம் நூற்றாண்டு).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...