சனி, 24 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 67

இலக்கணம் - பிற இலக்கண நூல்கள்

உவமான சங்கிரகம்

1.         உவமான சங்கிரகம் குறிப்புவரைக.
திருவல்லிபுத்தூர் திருவேங்கடஐயர் எழுதிய நூல். 16 பாடல்களைக் கொண்டது. வெண்பாவில் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளது. மகளிர் முடிமுதல் அடிவரை உவமைப் பண்புகளைக் கூறும் நூல் இது. பெண்களின் 40 உறுப்புகளுக்கு உவமை கூறியுள்ளார். பெண்களின் மார்புக்கு 20 உவமைகள் கூறப்பட்டுள்ளன. இதுவே ஒர் உறுப்புக்குக் கூறப்பட்ட அதிகமான உவமை வகைகளாகும். 1871இல் ஊ. புட்பரதசெட்டியரால் சென்னை கலாரத்நாகர அச்சுந்கூடத்தில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. உவமான சங்கிரகம் என்ற பெயரில் மதுரைத் தமிழ்ச்சங்கம் 1914இலில் பதிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன் ஆசிரியர் விவரம் தெரியவில்லை என்ற குறிப்புள்ளது. 37 பாடல்களைக்கொண்ட இந்நூலைப் பரிசோதித்தவர் சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர். திருவேங்கட ஐயர்  செய்த உவமான சங்கிரகத்தினும் இது வேறானது என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...