செவ்வாய், 27 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 75

இலக்கியம் - திணை இலக்கியம்


6.         நக்கீரர் கூறும் கடைச்சங்கப் புலவர், புரவலர் பற்றிய செய்தியைக் கூறுக?
சிறு மேதாவியார், சேந்தன் பூதனார், பெருங்குன்றூர் கிழார்,   நக்கீரர் உள்ளிட்ட 49 புலவர்கள் கடைச்சங்கத்தில் இருந்தனர். முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்கள் புரவலர்களாக இருந்தனர். அவர்களுள் கவியரங்கேறிய பாண்டியர் மூவர் ஆவார்.

7.         சங்கம் என்ற அமைப்பு தமிழகத்தில் இருந்தது இல்லை என்ற கருத்துடையோர்?
பி.டி. சீனிவாச அய்யங்கார்,  K. N. சிவராசப்பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார் ஆகியோர்.

8.         சங்கம் இருந்தது இல்லை என்ற கருத்துடையோர் கூறும் செய்திகளுள் சிலவற்றைக் கூறுக?
1.         சங்கம் என்ற நூல் தமிழ்ச்சொல் அன்று.
2.         சங்க நூல்களில் சங்கம் இருந்ததற்கு சான்றுகள் இல்லை.
3.         போடும் பூசலும் மிக்க காலத்தில் புலவர்கள் ஒன்றுகூடி தமிழ் ஆராய்ச்சி செய்திடுக்க முடியாது.

9.         ஒரு சங்கம் மட்டுமே இருந்தது உண்மை என்ற கருத்துடையோர்  யார்?
வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகியோர்.

10.       முச்சங்கம் இருந்தது உண்மை என்ற கருத்துடையோர்  யார்?
உ.வே. சாமிநாத ஐயர், கா.சு.பிள்ளை, கா. அப்பாத்துரையார், தேவநேயப் பாவாணர் ஆகியோர்.


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...