வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 51

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


பிரபந்த தீபம் (19ஆம் நூற்.)

1.         பிரபந்த தீபம் பற்றிக் கூறுக?
இலக்கிய வகைகளை விளக்கிக் கூறும் நூல். இதன் ஆசிரியர் பெயர் போல்வன தெரியவில்லை. பாயிரம், கடவுள் வாழ்த்து ஆகியவையும் கிடைக்கவில்லை. 97வகை நூல்களுக்கு இலக்கணம் இடம்பெற்றுள்ளது. 1980இல் ச.வே. சுப்பிரமணியனால் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபந்தத் திரட்டு

1.         பிரபந்தத் திரட்டு பற்றிக் கூறுக?
திரட்டியல் என்னும் ஓரியலே கிடைத்துள்ள நூல், ஆசிரியர் விபரம் தெரிந்திலது. வெண்பா யாப்பில் 71 பாடல்கள் உள. பிற பாட்டியல் நூல்களில் கூறப்படாத பல்வகை புதிய நூல்களுக்கு இலக்கணம் கூறும் நூல் இது. அச்சேறாத நூலாகிய  இதன் ஏட்டுச்சுவடி உ.வே. சாமிநாதையர்  நூலகத்தில் உள்ளது என்பர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...