புதன், 14 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 43

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


இந்திர காளியம் (9ஆம் நூற்.)

1.         இந்திர காளியம் குறிப்புத் தருக?
இந்திரகாளியார் இயற்றிய பாட்டியல் நூல். இந்நூல் முழுவதும் கிடைக்கவில்லை. பன்னிரு பாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல் ஆகியவற்றின் வழித் தொகுத்து மூலமும் பொழிப்புரையுமாகக் க.ப. அறவாணனால் 1974இலில் பதிப்பிக்கப்பட்டன. அகவற்பாவால் அமைந்த நூல் இது.

2.         இந்திர காளியம் என்ற பெயரிய நூல்கள் யாவை?
இந்திர காளியார் செய்த இந்திர காளியம் (பாட்டியல் நூல்), யமளேந்திரர் செய்த இந்திரகாளியம் (இசைத்தமிழ் நூல்).

3.         இந்திர காளியார் பெயரைப் பன்னிருபாட்டியல் கூறும் இடங்கள்?
34 இடங்கள்.

4.         இந்திர காளியத்தை முதன்முதலாகத் தொகுத்துப் பதிப்பித்தவர்?
க.ப. அறவாணன். (45 நூற்பாக்கள் அவரால் தொகுக்கப்பட்டுள்ளன).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...