வெள்ளி, 23 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 64

இலக்கணம் -நிகண்டு - அகராதிகள்


34.      19ஆம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி உரைக்க?

வ.  எண் அகராதியின் பெயர் - தொகுத்தவர்  பதிப்பாண்டு (குறிப்பு) 

1.
ஆங்கிலம் தமிழ்ச் சொற்றொகை (A Vocabulary -  English & Tamil) தெரியவில்லை முதல் பதிப்பு 1807. 
2. அகராதித் தமிழ் (Dictionnaire, Francais – Tamoul  Tamoul - Francais)   பிளின் காலம் 1831  (முதற் பகுதி பிரெஞ்சு - தமிழ் அகராதியாகவும், இரண்டாம் பகுதி தமிழ் - பிரெஞ்சு அகராதியாகவும் 282 பக்கங்களைக் கொண்டது). 
3.
ராட்லர்  அகராதி - ராட்லர் - முதல் தொகுதி 1834இலும் ராட்லர் மறைவுக்குப்பின் 1836- 37இலில் இரண்டாம் தொகுதியும் மூன்றாம் தொகுதி 1839இலும் நான்காம் தொகுதி 1841இலும் வெளிவந்தன (3,4ஆம் தொகுதிகளைத் திருத்தம் செய்தவர்கள் வேங்கடாசலமுதலியார், டெய்லர் ஆகியோர். மொத்தம் 1452 பக்கங்களைக் கொண்டது இவ்வகராதி).
4.
வின்சுலே ஆங்கிலம் - தமிழ் அகராதி - வின்சுலே காலம் 1842. 
5.
பழமொழி அகராதி பொர்சிவல் 1842இல் வெளியானது (1900 பழமொழிகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளிவந்துள்ளன. இதன் இரண்டாம் பதிப்பில் (1847இலில்) மேலும் பல பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன). 
6.
மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் 1842இல் வெளியானது (வெளியிட்டவர் : ஸ்பால்டிங். இது யாழ்ப்பாண அகராதி, மானிப்பாய் அகராதி, மாவெல் தமிழ் அகராதி என்றும் வழங்கப்படும். 58500 பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வடமொழி அகராதிகளிலிருந்து நேரடியாக இதில் இடம்பெற்றுள்ளன. தமிழ் அகராதிகளில் இதுவே முதலாவது பெரிய அகராதியாகும்).
7. திருட்டாந்த சங்கிரகம் - பெர்சிவல்  -1843இல் வெளியானது (1873 பழமொழிகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றுள்ளன). 
8.
தாதுமாலை - நீர்வேலிச்சங்கர பண்டிதர் (வடசொற்கள் கிரந்த எழுத்தில் அகரநிரலில் அமைந்துள்ளன. தாதுக்களின் பொருள் வேறுபாடுகள் தமிழில் பெறப்பட்டுள்ளன). 
9.
நைட் ஸ்பால்டிங் ஆங்கிலம் தமிழ் அகராதி நைட், ஸ்பால்டிங் காலம் 1842. 
10.
பெர்சிவல் ஆங்கிலம்- தமிழ் அகராதி பெர்சிவல்  1861இல் வெளியானது. 

11.
இலத்தீன்- பிரெஞ்சு - தமிழ் அகராதி  முசே, துய்புய் 1846இல் வெளியானது. 
12. ஒருசொல் பலபொருள் விளக்கம் அண்ணாசாமி பிள்ளை 1850 இல் வெளியானது (சூடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதியை அடிப்படையாகக் கொண்டது).
13. தமிழ்- இலத்தீன் அகராதி தெரியவில்லை 1850இக்குப் பிற்பட்ட நூல் என்பர். 
14.
ஆங்கிலம்- தெலுங்கு- தமிழ் அகராதி எ.எம். கிருஷ்ணசாமிப் பிள்ளை 1851இல் வெளியானது. 
15.
ஆங்கிலம்- தமிழ் பையகராதி ஊச். டர்லனி 1851இல் வெளியானது. 
16.
ஆங்கிலம்- தமிழ் அகராதி L.S. (முழுப்பெயர் தெரியவில்லை) முதல் பதிப்பின் காலம் தெரியவில்லை. இரண்டாம் பதிப்பு 1852இல் வெளியானது.
17. ஆங்கிலம்- தமிழ் அகராதி ஹோப்ரா, ஸ்பெர்ஸ், நெய்டர், பிரதர்டன் 1852 இல் வெளிவந்தது.
18. பிரெஞ்சு- தமிழ் அகராதி முசே, துய்புய்  1855இல் வெளிவந்தது. (இதன் சுருக்கமும் வெளிவந்தது). 19. ஆங்கிலம்- தமிழ் அகராதி வில்லியம் நெவின்சு என்னும் சிதம்பரம்பிள்ளை 1858இல் வெளிவந்தது.
20.
போப் தமிழ்- ஆங்கில அகராதி ஜி.யூ. போப் காலம் 1859.
21.
வின்சுலோ தமிழ்- ஆங்கில அகராதி பவர் 1862இல் வெளிவந்தது (67452சொற்கள் கொண்டது) .
22.
குரி தமிழ்-  இலத்தீன் அகராதி குரிபாதிரியர் காலம் 1867.
23.
பதார்த்த பாஸ்கரம் தி.க. நாராயண ஐய்யங்கார் 1877இல் வெளியானது. (கிரந்தம் - தமிழ் அகராதி).
24.
பில்டர் ஆங்கிலம் - தமிழ்ச் சொற்றொகை வீராசாமி முதலியார் 1880இல் வெளிவந்தது. 
25.
இந்துஸ்தானி-தமிழ்ச் சொற்றொகை முகமது கௌது 1882இல் பர்மாவில் வெளியானது. 
26.
பர்மா-  தமிழ்ச்சொற்றொகை முகமது கௌது 1882இல் பர்மாவில் வெளியானது.
27. ஆங்கிலம்- தமிழ்ச்சொற்றொகை சவரிநாத நாயகர் 1882இல் பர்மாவில் வெளியானது.
28.
அகராதிச் சுருக்கம் விசயரங்க முதலியார் 1883இல் வெளியானது. (3000 சொற்கள் உள்ளன) 
29.
விசுவநாத பிள்ளை தமிழ் - ஆங்கில அகராதி விசுவநாத பிள்ளை 1888இல் வெளிவந்தது. 
30.
லாசரஸ் :பழமொழி அகராதி லாசரஸ் காலம் 1894. 
31.
தரங்கம்பாடி அகராதி --- 1897இல் வெளியானது. (33000 சொற்கள் உள்ளன) 
32.
ஹெர்மன்ஜென்சன் பழமொழி அகராதி ஹெர்மன் ஜென்சன் காலம் 1897 (3644 பழமொழிகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றுள்ளன).

கருத்துரையிடுக