வெள்ளி, 16 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 52

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


பொருத்த விளக்கம் (19ஆம் நூற்.)

1.         பொருத்தத்தை மட்டும் தனித்துப் பேசும் நூல்கள் சில?
1. வரையறுத்த பாட்டியல் (மங்கலப்பொருத்தம் மட்டும்) 2. சண்முகப் பாட்டியல் 3. பொருத்த விளக்கம் 4. பொருந்த வினாவிடை (பின்மூன்றும் 10 பொருத்தங்களையும் கூறும்) ஆகியன. இவற்றுள் சண்முகப் பாட்டியல், பொருத்த வினாவிடை ஆகியன இன்னும் (1983வரை) அச்சாகவில்லை என்பர்.

2.         பொருத்த விளக்கத்தின் ஆசிரியர்?
குலாம் காதிறு நாவலர். (இந்நூல் 1880இல் திருச்சிராப்பள்ளி புலவர் அவையில் அரங்கேறியதாக இந்நூலின் பாயிரம் கூறுகின்றது).

3.         பொருத்த விளக்கத்தின் யாப்பு?
நூற்பா யாப்பு (91 நூற்பாக்கள் கொண்ட நூல் இது).

4.         பொருத்த விளக்கத்தின் உரைகாரர்?
ஆ.கா. பிச்சை இபுராகிம்.

5.         பொருத்த விளக்கப் பதிப்பு வெளிவந்த ஆண்டு?
1900. (காரைக்காலில் இருந்து வெளியிடப்பட்டது).

கருத்துரையிடுக