திங்கள், 19 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 55

இலக்கணம் - நாடகம்
நாடகவியல்


1.         மறைந்து போன நாடக இலக்கண நூல்கள் யாவை?
பரதம், அகத்தியம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம் போல்வன.

2.         பிற்காலத்தில் (19ஆம் நூற்.) எழுதப்பட்ட நாடக இலக்கண நூல்?
பரிதிமாற் கலைஞர் எழுதிய நாடகவியல் (1897இல் வெளிவந்த முதற்பதிப்பில் 70 சூத்திரங்கள் இருந்தன. மேலும் சில நாடக இலக்கணங்களைச் சேர்த்து 272 சூத்திரங்களாக்கி 1901இல் வெளியிட்டார்).

3.         நாடகவியலுக்கு உரை எழுதியவர்?
பரிதிமாற் கலைஞரின் மாணவர் பலராம ஐயர் நாடகவியலின் முதல் இரண்டு இயல்களுக்கு உரை எழுதி வெளியிட்டார் (வெளியான ஆண்டு தெரியவில்லை). பின்னர் பரிதிமாற் கலைஞரின் மகன் சுவாமிநாதன் வேண்டுகோளால் நூல் முழுமைக்கும், பலராமஐயர் உரையெழுதி 1934இல் வெளியிட்டார்.

4.         நாடகவியலின் அமைப்பு யாது?
நாடகவியல் பாயிரம் (9நூற்பா) நூல் (1 நூற்பா), பொதுவியல்பு (107 நூற்பா), சிறப்பியல்பு (56 நூற்பா), உறுப்பியல்பு (50 நூற்பா), நடிப்பியல்  (49 நூற்பா) ஆகிய பகுப்புகளை உடையது.

5.         இன்பியல், துன்பியல் ஆகியவற்றைப் பரிதிமாற் கலைஞர் எவ்வாறு அழைத்துள்ளார்?
இன்பியலை நற்பொருளிறுதி என்றும், துன்பியலைத் தீப்பொருளிறுதி என்று பெயர் சூட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...