செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 29

இலக்கணம் - பொருளிலக்கணம் 
பன்னிரு படலம்

1.         பன்னிரு படலம் பற்றிக் கூறுக?
அகத்தியரின் மாணவர்களில் தொல்காப்பியர் உள்ளிட்ட பன்னிருவர் செய்த நூல் இது என்பர் (புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம்). இங்குக் கூறப்படும் தொல்காப்பியர் தொல்காப்பியம் செய்தவரல்ல என்பது இளம்பூரணர் கருத்து. பன்னிரு படலம் அளவால் பெயர்பெற்ற நூல் என்பது இறையனார் களவியல் உரை. இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், இறையனார் களவியல் உரைக்காரர், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் ஆகியோர் பன்னிருபடலத்தைத் தம் உரை நூலுள் குறித்துள்ளனர். புறப்பொருள் வெண்பாமாலை, பன்னிருபடலத்தின் வழிநூலாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...