சனி, 24 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 68

இலக்கணம் - பிற இலக்கண நூல்கள்


அறுவகை இலக்கணம் (19ஆம் நூற்.)

1.         அறுவகை இலக்கணம் குறிப்பு வரைக?
ஐந்திலக்கணத்தோடு புலமை இலக்கணத்தைச் சேர்த்து ஆறுவகை இலக்கணமாக, இதனை எழுதியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம், புலமை இலக்கணம் என ஆறுவகைப் பகுப்பும் 799 நூற்பாக்களும் கொண்ட நூல் இது. இந்நூல் 1893இல் அட்டாவதானம் பூவை. கல்யாண சுந்தரமுதலியரால் பதிப்பிக்கப்பட்டது. அப்பதிப்பில் ஏழாம் இலக்கணமொன்றும் (அறுவகை இலக்கணத்தின் ஒழியும் விரிவும்) இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: