திங்கள், 19 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 56

இலக்கணம் - நிகண்டுகள்

1.         இறையனார் களவியல் உரைப்படி நிகண்டு என்பது என்ன?
ஒரு பொருள் பலசொல் தொகுதியையும், பலபொருள் ஒரு சொல் தொகுதியையும் செய்யுளில் அமைத்துக் கூறும் நூல் நிகண்டு என இறையனார் களவியல் உரை கூறுகின்றது.

2.         நிகண்டு என்பது இடுகுறிப்பெயர் எனக் கூறும் நூல்கள்?
இறையனார் களவியல் உரை, நன்னூல் மயிலைநாதர் உரை ஆகியன.

3.         நிகண்டு நூல்களில் காலத்தால் முந்தைய நூல் எது?
சேந்தன் திவாகரம் (முதல் நிகண்டாதலின் ஆதிநிகண்டு எனவும்படும்).

4.         சேந்தன் திவாகரம் பற்றிக் கூறுக?
அம்பர் என்னும் ஊரின் தலைவர் சேந்தன் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கத் திவாகரர் என்பவரால் எழுதப்பட்ட நூல் சேந்தன் திவாகரம். தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பன்னிரண்டு தொகுதிகளுடையது. இந்நூலில் 9500 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் காலம் 8ஆம் நூற்றாண்டு.  முதற்கண் இந்நூலைப் பதிப்பித்தவர் தாண்டவராய முதலியார் (1839இல்) ஆவார்.

5.         பிங்கல நிகண்டு குறிப்பு வரைக?
பிங்கலர் என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் 4121 நூற்பாக்களில் 15800 சொற்களுக்குப் பொருள் கூறுகின்றது. பத்து வகைகளாக  அமைந்த இந்நூலின் காலம் 8ஆம் நூற்றாண்டு என்றும், 10ஆம் நூற்றாண்டு என இருகருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இந்நூலின் முதற்பதிப்பு சோடசாவதானம் தி.க. சுப்பராயச் செட்டியரால் தி. சிவன்பிள்ளை உரையுடன் 1890இல் வெளியிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...