ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 36

இலக்கணம் - அணியிலக்கணம்


மாறனலங்காரம் (16 ஆம் நூற்.)

1.         மாறனலங்கார ஆசிரியர்?
திருக்குருகைப்பெருமாள் கவிராயர் (இவர் எழுதிய பிற நூல்கள்: மாறனகப்பொருள், திருப்பதிக்கோவை, மாறன் பாப்பாவினம், திருக்குருகை மான்மியம்,  நம்பெருமாள் மும்மணிக்கோவை,  ஆகியன).

2.    மாறனலங்காரப் பகுப்பு?
பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல், எச்சவியல் என நான்கு இயல்களும், சிறப்புப் பாயிரம் நீங்கலான 326 நூற்பாக்களும் கொண்டது.

3.         மாறனலங்காரம் கூறும் பொருளணிகள் எத்தனை?
64 அணிகள் (தண்டியலங்காரம் 35 எனக் கூறியுள்ளது).

4.         மாறனலங்கார உரைகாரர்?
தென்திருப்பேரைக் காரிரத்தின கவிராயர் (எடுத்துக்காட்டுப் பாடல்களை நூலாசிரியரே பாடியுள்ளார்).

5.         மாறனலங்கார முதற்பதிப்பு?
1913இல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக முதற்பதிப்பு வெளிவந்துள்ளது.

கருத்துரையிடுக