இலக்கணம் - யாப்பிலக்கணம்
யாப்பருங்கலக் காரிகை (10 ஆம் நூற்.)
1. யாப்பருங்கலக் காரிகையின் யாப்பு?
கட்டளைக் கலித்துறை யாப்பு.
2. மகடூ முன்னிலையாக அமையும் முதல் இலக்கண நூல்?
யாப்பருங்கலக் காரிகை.
3. யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியர்?
அமிதசாகரனார் (உரையாசிரியரான குணசாகரரும் இந்நூலைப் பாடி முற்றுவித்தார் என்பர்).
4. காரிகையின் வேறொரு பெயர்?
யாப்பருங்கலப் புறனடை.
5. காரிகை நூலமைப்பு?
உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று இயல்களும் 44 காரிகை (நூற்பா)களும் கொண்டது.
6. முதல் நினைப்புக் காரிகைப்பாடல் இடம்பெற்ற நூல்?
யாப்பருங்கலக்காரிகை (பாடியவர் உரைகாரர் குணசாகரர். அமிதசாகரரும் சில பாடல்களைப் பாடியுள்ளார் என்பர்).
7. காரிகையின் உரைகாரர்?
குணசாகரர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக