செவ்வாய், 13 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 41

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


வரையறுத்த பாட்டியல் (16ஆம் நூற்.)

1.  ஆசிரியர் பெயர் அறியப்படாத வரையறுத்த பாட்டியல் நூலிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை?
பத்துக் கட்டளைக் கலித்துறைப் பாக்கள்.

2.         வரையறுத்த பாடடியல் நூலமைதி?
முதல் மூன்று பாடல்கள் வாழ்த்து, அவையடக்கம், வருபொருள் உரைத்தல் பற்றியன, எஞ்சிய ஏழும் இன்ன எழுத்து முதலாகவுடைய பெயர்களுக்கு இது மங்கலச் சொல் என உரைக்கும் பொருள் நிலையின.

3.         வரையறுத்த பாட்டியலின் வேறுபெயர்?
சம்பந்தப் பாட்டியல் (பெயர் அறியப்படாத நூலாசிரியரின் ஆசிரியர் சம்பந்த முனிவர் பெயரால் அமைந்தது. சம்பந்த முனிவர் இயற்றியதாகவும் கருதுவோர் உண்டு).

4.         வரையறுத்த பாட்டியலின் முதற்பதிப்பு?
வெண்பாப்பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும் இணைத்து 1854இல் வெளிவந்துள்ளன. இதுவே வரையறுத்த பாட்டியலின் முதற்பதிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...