திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம் - 74

இலக்கியம் - திணை இலக்கியம்

1.         கிடைக்கும் பாடல்களில் சங்கம் பற்றிய முதற்குறிப்பு யாருடைய பாடலில் இடம்பெற்றுள்ளது?
திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தின் திருப்புத்தூர் திருத்தாண்டகப் பாடலில் இடம்பெற்றுள்ளது.

2.         சங்கம் பற்றிய முழுவரலாறு கூறும் முதல் நூல் எது?
இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர்  பெயரால் வழங்கும் உரை.

3.         நக்கீரர் உரைப்படி இருந்த சங்கங்கள் யாவை?
தலைச்சங்கம்   -    தென்மதுரை
இடைச்சங்கம்   -    கபாடபுரம்
கடைச்சங்கம்    -    மதுரை (உத்திர மதுரை).

4.         நக்கீரர் கூறும் தலைச் சங்கப்புலவர், புரவலர் பற்றிய செய்திகளை கூறுக?
தலைச்சங்க புலவர்கள்: அகத்தியர், முருகக் கடவுள், முரிஞ்சியூர் முடிநாகராயர் உள்ளிட்ட 549 பேர்.
புரவலர் : காய்ச்சினவழுதி முதலாக கடுங்கோன் ஈறாக 89 பேர். அவருள் புலவராய் கவியரங்கேறியவர் எழுவர்.

5.         நக்கீரர் கூறும் இடைச்சங்கப் புலவர், புரவலர் பற்றிய செய்தியைக் கூறுக?
இடைச்சங்கப் புலவர்கள்: அகத்தியர், சொல்காப்பியர், வெள்ளூர் காப்பியன் முதலாக 59 பேர்.
புரவலர்: வெண்தேர் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பேர். அவருள் கவியரங்கேறியோர்  ஐவர்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...