இலக்கணம் - யாப்பிலக்கணம்
யாப்பருங்கலம் (10 ஆம் நூற்.)
1. யாப்பருங்கல ஆசிரியர்?
அமித சாகரனார் (அமிர்தசாகரனார் என்பது பவானந்தர் பதிப்புக் கருத்து).
2. அமித சாகரர் இயற்றிய வேறு நூல்?
யாப்பருங்கலக் காரிகை (முதலில் இயற்றிய நூல் யாப்பருங்கலம் ஆகும்).
3. யாப்பருங்கல நூலளவு?
உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்றியல்களில் பாயிரம், கடவுள் வாழ்த்து நீங்கலான 96 நூற்பாக்கள். மொத்த அடிகள் 222.. அடிகள் அனைத்தும் அளவடிகளாகும். தனிச்சொல் ஒன்று கூட இடம்பெறாத அகவல் அடிகளைக் கொண்டது யாப்பருங்கலம்.
4. யாப்பருங்கல விருத்தியுரைகாரர் யார்?
யாப்பருங்கல விருத்தியுரைகாரர் பெயர் தெரிந்திலது (யாப்பருங்கலக் காரிகையின் உரைகாரர் குணசாகரரே இவ்விருத்தியுரையையும் எழுதினார் என்பதும் உண்டு. அது பொருந்தாது என்பர்).
5. யாப்பருங்கல விருத்தியுரையின் முதற்பதிப்பு?
யாப்பருங்கல விருத்தி, சரவண பவானந்தரால் (முதற்பாகம் - பதிப்பாண்டு 1916), இரண்டாம் பாகம் - பதிப்பாண்டு 1917 என) இருபாகங்களாக வெளியிடப்பட்டது.
1 கருத்து:
good. conguratulations.
கருத்துரையிடுக