திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 37

இலக்கணம் - அணியிலக்கணம்


சந்திராலோகம் (19ஆம் நூற்.)

1.         சந்திராலோகம் பற்றிக் கூறுக.
வடமொழி அணியிலக்கண நூலாகிய சந்திராலோகம் என்பதனைத் தமிழில் மொழிபெயர்த்து அணியிலக்கணம் என்ற பெயரில் உரைநடையாக எடுத்துக்காட்டுப் பாடல்களோடு வழங்கினார் திருத்தணிகை விசாகப்பெருமாளையர். இவ்விலக்கண உரைநடையை நூற்பா வடிவில் தந்தவர் முத்துசாமி ஐயங்கார். இச்சந்திராலோகம் என்ற நூலின் மூலத்தை 1909இல் மதுரைத் தமிழ்ச்சங்கச் செந்தமிழ்ப் பிரசூரம் வெளியிட்டுள்ளது. சந்திராலோகம் 126 நூற்பாக்களைக் கொண்டது. பொருளணிகளை மட்டும் கூறியுள்ள இந்நூலுள் 100 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதன் இரண்டாம் பதிப்பு ச.வே. சுப்பிரமணியத்தால் 1979இல் வெளியிடப்பட்டுள்ளது.

மாணிக்கவாசகர் குவலயானந்தம்

1.         மாணிக்கவாசகரின் குவலயானந்தம் குறிப்பு வரைக?
அணியிலக்கண நூலாகிய இதனை இயற்றியவர் மாணிக்கவாசகன் என்னும் ஞானதேசிகச் சிவயோகி என்பவராவர். இந்நூல் உறுப்பியல், அணியியல், சித்திர இயல் என மூன்று இயல்களையும் 299 நூற்பாக்களையும் கொண்டது. இதன் முதற்பதிப்பு ச.வே. சுப்பிரமணியனால் 1979 இல் வெளிவந்தது. 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...