ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 35

இலக்கணம் - அணி இலக்கணம்

தண்டியலங்காரம் (12ஆம் நூற்.)

1.         தண்டியலங்கார ஆசிரியர்?
தண்டி (எடுத்துக்காட்டுப் பாடல்களும் இவர் பாடியனவே).

2.  தண்டியாசிரியர் தண்டியலங்காரத்தின் எடுத்துக்காட்டுப் பாடல்களையும் எழுதினார் என்பதைக் கூறிய நூல்?
பிரயோக விவேகம் (இந்நூலின் ஆசிரியரும் உரையாசிரியரும் சுப்பிரமணிய தீட்சிதர் ஆவர்)

3.         தண்டியலங்காரப் பகுப்பு?
பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று இயல்களும், நூற்பா யாப்பில் பாயிரம், காப்புச் செய்யுள் நீங்கலான 125 நூற்பாக்களும் உடையது.

4.      தன்னேரில்லாத் தமிழைச் செங்கதிருக்கு ஒப்பிட்டுரைக்கும் நூல்?
தண்டியலங்காரம்.

5.         காப்பிய இலக்கணம் கூறும் முதல் நூல்?
தண்டியலங்காரம்.

6.         தண்டியலங்கார உரையாசிரியர்?
உரைமேற்கோட் பாடல்களால் அநபாயச் சோழன் காலத்தில் எழுதப்பட்ட தண்டியலங்காரப் பழைய உரையாசிரியர் பெயர் தெரிந்திலது என்பார் உ.வே. சாமிநாதையர். இவ்வுரைகாரர் திருவாவடுதுறை சுப்பிரமணியதேசிகர் என்பாரும் உளர். எடுத்துக்காட்டுப் பாடல்களைத் தண்டியாசிரியரே பாடியமையால் இந்நூலின் உரைகாரர் சுப்பிரமணிய தேசிகர் என்பது இரா. இளங்குமரனார் கருத்து. எனவே, சுப்பிரமணிய தேசிகரே தண்டியலங்கார உரைகாரர் என்ப.

7.         தண்டியலங்கார முதற்பதிப்பு?
தில்லையம்பூர் சந்திரசேகர கவிராச பண்டிதர் வெளியிட்ட (1857 இலில்) பதிப்பே தண்டியலங்கார முதற்பதிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...