திங்கள், 12 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 39

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


வெண்பாப் பாட்டியல் (13ஆம் நூற்.)

1.         வெண்பாப் பாட்டியல் இயற்றியவர்?
குணவீர பண்டிதர் (நேமிநாதத்தை இயற்றியவரும் இவரே).

2.         வெண்பாப் பாட்டியலின் வேறு பெயர்?
வச்சணந்திமாலை (குணவீர பண்டிதரின் ஆசிரியர் வச்சணந்தியின் பெயரால் வழங்குவது).

3.         வெண்பாப் பாட்டியல் நூலமைதி கூறுக?
வெண்பா யாப்பில் அந்தாதிமுறையில் 100 வெண்பாக்களும், முதன்மொழியியல், செய்யுளியல், பொதுவியல் என்ற மூன்றியல்களும் கொண்டது. அந்தாதித் தொடையில் அமைந்த முதல் இலக்கண நூல் இதுவாகும்.

4.         வெண்பாப் பாட்டியலின் உரை?
இந்நூலின் உரையாசிரியர் பெயர் தெரியவில்லை. இவ்வுரை பொழிப்புரையும் குறிப்புரையுமாக அமைந்தது. இதன் காலம் 16ஆம் நூற்றாண்டு. இந்நூலின் முதற்பதிப்பு 1854ஆம் ஆண்டில் வெளிவந்தது. பழைய உரையோடு கொ. இராமலிங்கத் தம்பிரானின் விளக்கங்களைச் சேர்த்து 1936இல் கழகம் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...