வியாழன், 22 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 61

இலக்கணம் - நிகண்டு நூல்கள்


26.      அபிதான மணிமாலை பற்றிக் கூறுக?
திருவம்பலத்து இன்னமுதம் பிள்ளை இயற்றிய இந்நூல் 2404 நுற்பாக்களைக் கொண்டது. 9 தொகுதிகளை உடையது. இதன் ஆசிரியர் திருச்சற்றம்பலத்து இன்முதம் பிள்ளை எனவும்படுவார். இவர் காலம் 19ஆம் நூற்றாண்டு. எந்த நிகண்டு நூலும் கூறாத வான்மீகி, வியாசர் ஆகியோரை அபிதான மணிமாலை மட்டுமே கூறியுள்ளது. ஒட்டகத்தை நெடுங்களம் எனக் குறித்துள்ள புதுமையை இந்நூலில் காணமுடிகின்றது.

27.       விரிவு நிகண்டு குறிப்பு வரைக?
விரிவு நிகண்டின் ஆசிரியர் அருணாசல நாவலர். ஒருசொல் பல்பொருள் தொகுதி மட்டும் உள்ளது. இவ்வகை நிகண்டுகளில் விரிவுநிகண்டே அளவில் பெரியது. சூடாமணி நிகண்டின் 11ஆம் தொகுதியை முதல் நூலாகக் கொண்டு அமைவதால் 11ஆவது விரிவு நிகண்டு எனவும் பெறும். எதுகை முறையில் அமைந்த இந்நிகண்டில் நெல்லை மாவட்டச் சொற்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. நூலின் காலம் 19ஆம் நூற்றாண்டு.

28.       அகராதி விளக்குக?
சொற்களின் பொருளை வரையறுப்பது நிகண்டு ஆகும். நிகண்டு என்பது 12 தொகுதிகளுடையது, அதில் ஒன்று ஒரு சொல் பல்பெயர்த் தொகுதி (11ஆம் தொகுதி). இந்தப் பதினோராம் தொகுதியை மட்டும் கூறுவது அகராதி ஆகும்.

29.      தமிழில் தோன்றிய முதல் அகராதிநூல்?
வீரமாமுனிவர் எழுதிய சதுரகராதி.

30.      தமிழ் அகராதியின் தந்தை யார்?
வீரமாமுனிவர் (சதுரகாதியும், தமிழ் இலத்தின் அகராதியும், போர்ச்சுகீசியம் தமிழ் அகராதியும் இயற்றியுள்ளார் ).

கருத்துரையிடுக