இலக்கணம் - பிற இலக்கண நூல்கள்
தமிழ் இலக்கணக்கும்மி (20ஆம். நூற்.)
1. தமிழ் இலக்கணக்கும்மி பற்றிக் கூறுக.
நன்னூலைக் கும்மி யாப்பில் கூறும் நுலாகிய இதனைச் செய்தவர் துரை கனகசபை என்பவராவார். நன்னூல் போன்றே எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் என இருபகுப்பும், ஒவ்வொரு பகுப்பிலும் ஐந்து இயல்களும் கொண்டது. கடவுள் வணக்கம், அவையடக்கம் நீங்கலான 362 பாடல்கள் உள.
தமிழ் நூல் (20ஆம் நூற்.)
1. தமிழ்நூல் (தமினூல்) பற்றிக் கூறுக?
நூலாசிரியர் த. சரவணந்தமிழன். ஏழியல்களும் 445 நூற்பாக்களும் கொண்ட நூல். உரையையும் நூலாசிரியரே எழுதியுள்ளார். எழுத்து, சொல், தொடர்ப் புதுவிலக்கண நூல் என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக