இலக்கணம் - நிகண்டு நூல்கள்
31. சதுரகராதி பகுப்புகள்?
பெயர். பொருள், தொகை, தொடை என்ற நான்கு பகுதிகளைக் கொண்டது.
32. 17ஆம் நூற்றாண்டு அகராதிகளைப் பற்றி எழுதுக?
17ஆம் நூற்றாண்டில் 4 அகராதிகள் தோன்றியுள்ளன. அவை : 1. அகராதி மோனைக்கராதி எதுகை: முதலிரு எழுத்துக்கள்வரை அகரநிரல் அமைப்புடன் உரைநடையில் அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறும் அகராதி இது. இதன் காலம் 17ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர். 7500 சொற்கள் விளக்கப்பட்டுள்ள இவ்வகராதி இன்னும் (1985வரை) அச்சாகவில்லை என்பர்.
1. பத்துச்சொல் அகராதி: சொற்களின் எழுத்து எண்ணிக்கை அடிப்படையில் பத்துத்தொகுதிகளாக அமைந்த இவ்வகராதியில் திவாகரம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகணடு, நாமதீப நிகண்டு முதலிய நிகண்டுகளில் உள்ள சொற்கள் அகரவரிசையில் விளக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதி ஒரெழுத்துச் சொற்களும், இரண்டாம் தொகுதி ஈரெழுத்துச் சொற்களும் எனப் பத்து எழுத்துக்கள்வரை தொகுக்கப்பட்டுள்ள இவ்வகராதியும் இன்னும் (1985வரை) அச்சாகவில்லை என்பர்.
3. வைண விளக்கவுரை அருச்சொல் அகராதி: மணிப்பிரவாள நடையில் அமைந்த வைண உரைகளில் உள்ள அருஞ்சொற்களுக்கு அகவரிசையில் பொருள் கூறும் இவ்வகராதி சென்னை அரசினர் சுவடி நூலகத்தில் சுவடியாக உள்ளது.
4. தமிழ் - போர்ச்சுகீசிய அகராதி : புரோயன்சா என்பவர் தொகுத்த இவ்வகராதி 1697 இல் அம்பலக்காட்டில்அச்சானது. தமிழில் அச்சான முதல் அகராதி இதுவாகும். 16546 தமிழ்ச்சொற்களின் பொருள் போர்ச்சுகீசியம் அல்லது இலத்தீன் மொழியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக