இலக்கணம் - பொருளிலக்கண நூல்கள்
மாறனகப்பொருள் (16 நூற்.)
1. மாறனகப்பொருள் இயற்றியவர்?
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (இவரியற்றிய வேறுநூல்கள்: மாறன் அலங்காரம், மாறன் பாப்பாவினம்).
2. மாறன் அகப்பொருள் என்ற பெயரிலுள்ள மாறன் என்பது யாரைக் குறிக்கும்?
நம்மாழ்வார் (காரிமாறப் பெருமான் என்பது இவர் பெயர்களுள் ஒன்று).
3. மாறனகப்பொருள் அரங்கேறிய காலம்?
கி.பி. 1552 (கொல்லம் ஆண்டு 727 சித்திரை நாள் என்பது பாயிரச் செய்தி. நூலாசிரியரின் ஆசிரியரான சீநிவாச சீயர் என்பவர் முன்னிலையில் அரங்கேறியது இந்நூல்).
4. மாறகப்பொருட் பகுப்பு?
5 இயல்களும் 363 நூற்பாக்களும். (முதல் இயலான அகத்திணையியலும் இறுதி இயலான ஒழிபியலும் கிடைக்கவில்லை. களவியல், வரைவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களே கிடைத்துள்ளன).
5. மாறனகப் பொருளுக்குச் சான்றாகும் நூல்?
திருக்குருகைப் பெருமாள் கவிராயரே இயற்றிய திருப்பதிக்கோவை. (திருமால் கோயில் கொண்ட 93 திருப்பதிகளைப் பாடும் நூலாதலின் திருப்பதிக் கோவை எனப்பட்டது. கட்டளைக் கலித்துறை யாப்பில் 527 பாடல்களைக் கொண்டது. இந்நூலில் 455 துறைகள் இடம்பெற்றுள்ளன).
6. மாறனகப்பொருள் முதற்பதிப்பு ஆண்டு?
1932 (பதிப்பாசிரியர்: கி. இராமாநுசையங்கார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடு).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக