இலக்கணம் - பாட்டியல் நூல்கள்
சிதம்பரப் பாட்டியல் (16ஆம் நூற்.)
1. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர்?
பரஞ்சோதியார் (இவர் திருவிளையாடல் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் அல்லர்).
2. சிதம்பரப் பாட்டியல் நூலமைதி?
5 இயல்களும் 47 எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தப்பாக்களும் கொண்டது. முதல் இயல்கள் யாப்பிலக்கணத்தையும், பின்னிரு இயல்கள் பாட்டியல் இலக்கணத்தையும் கூறுவன.
3. சிதம்பரப் பாட்டியலின் உரை?
சிதம்பரப் பாட்டியலின் உரை முதல் மூன்று இயல்களுக்கு மட்டுமே உள்ளது. இதனாசிரியர் பெயர் தெரியவில்லை.
4. சிதம்பரப்பாட்டியல் கூறும் இலக்கிய வகைகளின் எண்ணிக்கை?
70 வகைகள்.
1 கருத்து:
நல்ல முயற்சி. தமிழில் இதுபோன்ற பதிவுகள் தேவை. நன்றி.
கருத்துரையிடுக